TAMILWORLD

Welcome to My New Blogging Blog

வள்ளுவர் யதார்த்த பிராமணர்!

இத்தனை நூற்றாண்டு காலம் வள்ளுவர் தன்னை இச்சமூகத்தில் நிலைநிறுத்திக்கொண்டது தன்னுடைய இலக்கியப் படைப்பாற்றலினாலும் தனது கருத்துக்களினாலும் ஆகும். சங்க இலக்கியம், காப்பியம் போன்ற பேரிலக்கியங்களின் வரிசையில் தன் ஆளுமையினால் நீங்காத இடம்பிடித்திருந்த வள்ளுவரைப் பற்றி வேஷ சாதியினர் மிக தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு அற்பத்தனமான சில கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தனர். இத்தகைய கண்டுபிடிப்புகள் வள்ளுவர் போன்ற யதார்த்த பிராமணர்களின் இயல்பான பெருமையை நிலைகுலைப்பது கடினமானது அல்லது முடியாத ஒன்றாகும். வள்ளுவரை விளக்குவதில் பண்டிதர் அயோத்திதாசர் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி…

போதி வள்ளுவர் போற்றிய ஆதி புத்தர்!

வள்ளுவர் தாம் இயற்றிய திரிக்குறளின் தெய்வ வாழ்த்தாக அமைத்த முதல் குறளில் புத்தரை “ஆதி பகவன்” என்று போற்றியுள்ளார். பௌத்த இலக்கண நூலான வீரசோழிய உரையில் காணப்படும் புத்தரைக் குறிக்கும் பாடல் ஒன்று “போதி, ஆதி, பாதம் ஓது!” என்றமைந்துள்ளது. இவ்வரியில் புத்தரைக் குறிக்க “ஆதி” என்ற சொல் இடம்பெற்றுள்ளதைக் காணலாம். பண்டைய காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி புத்தரை ஆதியங் கடவுள் என்று கூறுகிறது. அப்பாடல் பின்வருமாறு அமைந்துள்ளது. “ஆதியங் கடவுளை அருமறை பயந்தனை போதியங் கிழவனை பூமிசை…


Follow My Blog

Get new content delivered directly to your inbox.

Design a site like this with WordPress.com
Get started